நாட்டில் சூழல் மாசடைவதை தடுப்பதற்காக கழிவு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 24ம் திகதி முதல் 30ம் திகதி வரை அந்த வாரம் அமுல்படுத்தப்பட உள்ளது.
தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பொலிதீன், பிளாஸ்டிக் மற்றும் இலத்திரனியல் கழிவு தடுக்கும் நோக்கிலேயே இவ்வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
பிரதான நகரங்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்கள், மாநகர சபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் போன்றவற்றை உள்ளடக்கி பொலிதீன், பிளாஸ்டிக் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை ஒன்று திரட்டும் மத்திய நிலையம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.