• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

காலநிலை மாற்றத்தால் சவாலுக்குட்பட்டுள்ள உணவு உற்பத்தி தேசிய செயற்திட்டத்திற்கு புத்துயிரூட்டி தொடர்ச்சியாக முன்னெடுத்தல் மற்றும் நாட்டில் விவசாய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் அமுல்படுத்தப்படும் தேசிய உணவு உற்பத்திப் புரட்சி வாரத்தின் அரசாங்க ஊழியர் தினம் இன்று (11) இடம்பெறுகிறது.
இது தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு கொழும்பு ஜனாதிபதி மாவத்தையிலுள்ள செமா கட்டிடத்தில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் தலைமையில் நேற்று (10) நடைபெற்றது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நீல் த சில்வா, பொதுநிருவாக முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஏ ஜே ரத்னசிறி, மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) சுஜான் நாணயக்கார ஆகியோர் அரசாங்க ஊழியர் தினத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள 72 மெற்றிக் தொன் அரசியில் முதற்கட்டமாக 12 மெற்றிக் தொன் அரிசி இன்று (10) நாட்டரிசி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் உள்ள 1,220 குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் குளத்தை புனரமைப்புப் பணிகளை அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னதாக புனரமைப்பு செய்து தருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம உறுதியளித்துள்ளார்.

மேல்மாகாண 'தேசிய ஓய்வுபெற்றோர் தின நிகழ்வு - 2017 எதிர்வரும் 8ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo