• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

இலங்கை பரீட்சை திணைக்களம், அரச கரும மொழிகள் திணைக்களத்தினூடாக நடத்தும் அரச கரும மொழித் தேர்ச்சி பரீட்சை 2017 இம்மாதம் 28ம் திகதி நடைபெறுவுள்ளது.

நாட்டின் 33 வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை மற்றும் சத்திரசிகிச்சை பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கு சலுகையடிப்படையில் அவுஸ்திரேலியா கடனுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் கைச்சாத்திடப்பட்டது.

இனிவரும் காலங்களில் பட்டதாரிகளும் டிப்ளோமாதாரிகளும் மட்டுமே கல்வித்துறையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

விடுமுறை பெறாது சேவைக்கு சமூகமளிக்காதுள்ள படையினருக்கு இம்மாதம் 23ம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 15ம் திகதிவரையில்   பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள்  மற்றும் பத்திரிகையாளர்கள், எப்போதும் சரியானவற்றை தெரிவுசெய்து, உண்மைக்கு மதிப்பளித்து தமது பேனா முனைகளை பாவிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo