• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

மூளையை பயிற்றுவிக்கும் விளையாட்டுக்களினால் பயனுண்டா?

மூளையைப் பயிற்றுவிக்கும் விளையாட்டுகள், மூளையின் நலத்திற்குப் பலனளிக்கும் என்று கருதப்படும் அளவைவிடவும்  குறைவான பலன்களையே அளிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
 
அதற்குப் பதிலாக,மூளையின் செயல்பாடுகளைத் தூண்டும், இசைக் கருவிகளைக் கற்றல், பூத்தையல் வடிவமைத்தல் அல்லது தோட்டக்கலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று குளோபல் கவுன்சில் ஆஃப் பிரெய்ன் ஹெல்த் (Global Council on Brain Health) என்னும் அமைப்பின் அறிக்கை பரிந்துரைக்கிறது.
 
எவ்வளவு இளம் வயதில் இந்த செயல்களில் ஒரு நபர் ஈடுபடத் தொடங்குகிறாரோ, அந்த அளவுக்கு முதுமையில் அவர்களின் மூளை நன்றாக செயல்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 
புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள, தாமதம் என்று எதுவுமில்லை என்று ஏஜ் யூ.கே (Age UK) அமைப்பு கூறியுள்ளது.
சர்வதேச அறிவியலாளர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசாங்கங்களின் கொள்கை முடிவு வல்லுநர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அந்த அமைப்பு, மூளைத் திறனைத் தூண்டுவதற்கும், அறிவாற்றல் குறைவதைத் தடுக்கவும் ஆகச் சிறந்த வழிமுறைகளைப் பற்றி அந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.
 
மூளைத் திறனை அதிகரிக்க, புதிர்கள் மற்றும் மூளை விளையாட்டுகள் உள்ளிட்டவற்றை இணையத்தளத்தில் விளையாடுவது மிகவும் முக்கியமானது என்று பலரும் நம்பினாலும், அவற்றால் உண்டாகும் பலன்கள் மிகவும் வலுவற்றவையாக உள்ளன அல்லது பலன்களே இல்லாமலும் உள்ளன.
 
"அந்த மூளை விளையாட்டுகளை மனிதர்கள் விளையாடினால், அந்த விளையாட்டில் அவர்கள் முன்னேறலாம். ஆனால் அந்த விளையாட்டில் உண்டாகும் முன்னேற்றத்தால் அவர்களின் தினசரி அறிவுசார் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கான தீர்க்கமான முடிவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை, " என்று அந்த அறிக்கை கூறுகிறது.
 
உதாரணமாக, சுடோக்கு விளையாடுவதால் உங்களின் நிதி மேலாண்மைத் திறன் அதிகரித்துள்ளதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo