• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

புவி வெப்பமடைதலால் காணாமல் போகிறதா கோப்பி

தற்போது அதிகம் பேசப்படும் புவி வெப்பமடைதல் பிரச்சினை காரணமாக கோப்பி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
உலகில் வாழும் பலகோடி மக்களது புதிய நாளின் ஆரம்பித்தற்கான உற்சாக பானமாக விளங்கும் கோப்பியின் விளைச்சல் புவி வெப்பமடைதல் காரணமாக குறைவடைந்து காலப்போக்கில் காணாமல் போகக்கூடும் என்கிறார் “காஃபி ரிபோர்ட்" அறிக்கையின் ஆசிரியரும் கிவ் பூங்கா அய்வாளருமான  ஆரோன் டேவிஸ்.
 
மேலும் நாளுக்கு நாள் கோப்பிக் கொட்டைகளின் சுவையில் மாற்றமடையும் அபாயம் காணப்படுவதாக சுட்டிகாட்டியுள்ள அவர், புவி வெப்பமடைதல் ஏற்கனவே கோப்பி விளைச்சலை பாதிக்க ஆரம்பித்து விட்டது என்றும் இதனால் விரைவில் விலையும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உலகின் மிகப் பெரிய கோப்பி உற்பத்தி நாடான எத்தியோப்பியாவில்  60 வீதமான கோப்பி பயிர் செய்யப்படும் நிலப்பரப்பு புவி வெப்பமடைதல் காரணமாக இல்லாமல் போகும் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
மழைக் கால கதகதப்புக்கு பலர் விரும்பும் சூடான கோப்பி பானம் புவி வெப்பமடைதலை தாக்கும் பிடிக்ககாது என்பது பலருக்கு சோகமான செய்திதான்.
 
நன்றி- பிபிஸி
 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo