• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

சீனி என்றாலே சிறுபிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான். பிடிவாதம் பிடித்து கதறியழும் பிள்கைளை சமாதானப்படுத்த ஒரு தேக்கரண்டி போதுமானது. அந்தளவுக்கு பிள்ளைகளுக்கு சீனியின் இனிப்புச் சுவை மீது

வணிக கப்பல் பணியாளர்கள் மற்றும் அத்துறை சார்பில் வணிக கப்பல் செயலக பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரத்னவுடனான நேர்காணல்.

உலக நாடுகளுக்கிடையில் தகவல் அறியும் சட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலில் இலங்கையின் தகவல் அறியும் சட்டம்; மூன்றாவது சிறந்த தகவல் அறியும்சட்டமாகக் கண்டறியப்பட்டுள்ளது.  

sewanagala ga officeகதிரவன் தனது கதிர்களை மிகவும் ஆக்ரோஷமாக பரப்பிக்கொண்டிருக்கும் பொழுது. செவனகல பிரதேச
காற்றுகூட அனல் காற்றாகவே வீசியது. வரண்ட, பின்தங்கிய  செவனகல பிரதேச மக்களின் வாழ்வில் ஒளியாக செயற்படுகிறது செவனகல பிரதேச செயலகம்.
 
தணமல்வில பிரதேச செயலகப்பிரிவில் உள்ள 14 கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கி ஸ்தாபிக்கப்பட்டது செவனகல பிரதேச செயலகப்பிரிவு. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி செவனகல சீனி களஞ்சியசாலையில் இரு எழுது வினைஞர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட செவனகல பிரதேச செயலகம் இன்று இலங்கை அரச சேவைக்கே உதாரணமாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றதென்றால் மிகையாகாது.
 
ஆம், இப்பிரதேச செயலகம் ஸ்தாபிக்கப்பட்டு 17 வருடங்களில் 2016ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்திதிறன் விருதை தனதாக்கிக்கொண்டு சாதனை படைத்துள்ளது செவனகல பிரதேச செயலகம். ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள செவனகல பிரதேச செயலக பிரிவானது 223 சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்டது. அப்பிரதேச செயலகப்பிரிவில் 53343 தனிநபர்கள் வசிக்கின்றனர்
 
 இப்பிரதேச செயலகத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் விவசாயிகளாவர். இவ்விவசாயிகளின் பங்களிப்புடனேயே செவனகல பிரதேச செயலகம் சிறந்த தேசிய உற்பத்திக்கான விருதை தனாக்கிக் கொண்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட வளத்தினை பயன்படுத்தி சிறந்த அரச சேவையை வழங்கியதனூடாகவே இவ்விருது சாத்தியமாகியதென்கிறன்றனர் அப்பிரதேச செயலகத்தில் வசிக்கும் மக்கள்.
 
அரச சேவை குறித்து பொது மக்கள் மத்தியில் நல்லெண்ணம் மிக குறைவாகவே காணப்படுகிறது. வெறுமனே அமர்ந்திருந்து சம்பளம் பெறுபவர்கள் அரச சேவையாளர்கள் என்ற எண்ணப்பாட்டை மாற்றியமைக்கும் உதாரணமாக இன்று செவனகல பிரதேச செயலகம் கண்முன் நிற்கிறது. சிறந்த முகாமைத்துவம், தரமான சேவையை மக்களுக்கு வழங்கி விருதை தனாக்கிக்கொண்டது இப்பிரதேச செயலகம்.
 
 சேவை நாடி பிரதேச செயலகத்திற்கு வரும் ஒவ்வொரு நபரும் மீண்டும் மீண்டும் தமது காலத்தை வீணடிக்காமல் உடனடியாக தேவையை பூர்த்தி செய்து  அனுப்புவதே எமது ஒரே நோக்கமாகும் என்கின்றனர் அங்கு பணியாற்றும் அதிகாரிகள். சிறந்த வழிகாட்டியாகவும் தலைமைத்துவத்துடனும் தமது கடமையை செவ்வனே நிறைவேற்றும் பிரதேச செயலாளர் சந்தன லொக்குஹேவகேயுடன் கதைக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. செயற்றிறன் மிக்க சேவையை வழங்குவதற்காக திட்டமிட்ட முறையில் பணிகள் முன்னெடுப்பதற்கான சேவை முறையை நாம் அறிமுகப்படுத்தினோம் என்று ஆரம்பித்தார் அவர்.
 
sewanagala ga office3சேவை நாடி வரும் பயனாளிகள் அனைவரும் முதலில் பதிவு செய்யப்படுகின்றனர். பதிவு செய்யும்போதே அவர்களின் தேவை அடையாளங்காணப்படுகிறது. அவை கணனி வலையமைப்பினூடாக உரிய அதிகாரிகள் அல்லது பிரிவுகளுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் பிரச்சினைகள் ,  அன்றே நிவர்த்தி செய்யக்கூடிய பிரச்சினைகள், நிறைவேற்ற முடியாத சேவைகள், வேறு நிறுவனங்களால் நிறைவேற்ற வேண்டியவை மற்றும் பொறுப்பெடுக்க வேண்டியவை என்று நான்கு பிரதான விடயங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
பதிவானது தேசிய ஆள் அடையாள அட்டை அல்லது தொலைபேசி இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது. ஆவணப்படுத்தல், பதிலளித்தல், அறிவித்தல் என அனைத்து செயற்பாடுகளும் இணையதளமூடாகவே நடைபெறுகிறது. வருமான உறுதிபடுத்தல் குறுந்தகவல் ஊடாக நிகழ்த்தப்படுகிறது. செவனகல பிரதேச  செயலக பிரிவில் வசிக்கும் மக்கள் தற்போது இச்செயன்முறைக்கு பழக்கப்பட்டவர்களாயுள்ளனர். இது ஒரு இலகு முறையாகவும் தற்போது உணர்கின்றனர். மக்களின் பதில்களை பெற்றுக்கொள்ளவும் இம்முறையே பயன்படுத்தப்படுகிறது. மக்களின் பதில்களை பிரதேச செயலாளர் தனது கணனியில் பார்வையிடக்கூடிய வகையில் இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
தனது அதிகாரிகளிடமுள்ள குறைபாடுகளை அடையாளங்கண்டு நிவர்த்தி செய்துகொள்வதற்கு இம்முறை உதவியாக உள்ளது என்கிறார் செவனகல பிரதேச செயலாளர். தமது கருத்துக்கள், பதில்கள் உடனடியாக பிரதேச  செயலாளர் பார்வைக்கு சென்றுவிடும் என்றறிந்த பிரதேச மக்கள் உடனடியாக பதிலளிக்க தயங்குவதேயில்லை. இதனால் அதிகாரிகள் இயற்கையாக ஒழுக்க முறைகளை பின்பற்றுபவர்களாக உள்ளனர்.
 
 
செவனகல பிரதேச செயலகத்தின் கீழுள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளின் தகவல் அடங்கிய வலையமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அப்பிரதேச செயலகப்பிரிவில் உள்ள விகாரைகள் பற்றிய தகவல்கள், விசேட தேவைக்குரியவர்களின்  எண்ணிக்கை, நிலையான சொத்து விபரங்கள்,  பாலர் பாடசாலைகள், விடுமுறை விண்ணப்பம், ஆவணக்கூடம், சிறுநீரக நோயாளர்கள் குறித்த விபரங்கள், புலம்பெயர்ந்துள்ளோர் விபரங்கள் என அனைத்து தரவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
அதேபோல், திவிநெகும வீட்டுக்கடன் திட்டம், உள்நாட்டு வைத்தியர்கள் விபரங்கள், சுயதொழிலாளர்கள, சமூக அமைப்புகள், காணி தரவுகளுடன் உடனடியாக பெறப்பட அவசியமான அனைத்து தரவுகளும் இவ்வலைமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. கௌரவப்படுத்தல் திட்டத்தின் கீழ், புதன் கிழமைகளில் சேவைகளை பெற்றுக்கொள்ள நாடி வரும் பொது மக்களுக்கான விருந்தோம்பலும் நடத்தப்படுகிறது. அப்பிரதேச செயலக ஊழியர் அல்லது அவருடைய குடும்பத்தவர் ஒருவரின் பிறந்த தினத்தை காரணமாக கொண்டு சுயவிருப்புடன் பயனாளிகளுக்கு தேநீர், மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன.
 
sewanagala ga office.4அதேபோல், வாகன வருமான அனுமதிபத்திர பயனாளிகளுக்கு தினத்தை நினைவுபடுத்தி ஸ்டிக்கர்கள் வழங்குதல், முதியோர் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு அதற்கான பாதுகாப்பு அட்டை வழங்குதல் என்பனவும் முன்னெடுக்கப்படுகிறது. ஓய்வு தினம் குறித்து குறுந்தகவல் அனுப்புதல், புதிதாக திருமணம் செய்யும் இளம் பெண்களுக்கான ஆலோசனை வழங்குதல் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன.
 
இது தவிர காசோலை பாவனைக்கான ஆலோசனை, வாசிகசாலை வசதி, சேவை விபரங்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட ஆலோசனைகள் என்பனவும் மேற்கொள்ளப்படுகின்றன.
 
அத்துடன் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வீடமைத்துக்கொடுத்தல், விளையாட்டு மற்றும் கணனி நிலையங்கள் அமைத்தல், பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கல், பிறந்த தின நினைவுச்சின்னங்கள் வழங்குதல்,  பசுமை நகர திட்டம், போன்ற சமூக சார் விடயங்கள் சமூக சேவை திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் உறவினர் விஜயம் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணம் வழங்குதல், வைத்திய முகாம்கள் நடத்துதல் போன்ற விடயங்களையும் இப்பிரதேச செயலகம் நடத்துகிறது.
 
உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கில் உண்மையாகவும் நேர்மையாகவும் திட்டமிட்ட வகையிலும் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் சிறந்த பெறுபேற்றை பெற்றுகொடுக்கும் என்பது இப்பிரதேச செயலகம் சிறந்த சான்றாக விளங்குகின்றன.
 
அதற்கமைய கடந்த 2015ம் ஆண்டு 84.92 வீதமாக காணப்பட்ட சேவை முன்னேற்றமானது 2016ம் ஆண்டு டிசம்பர் அளவில் 98.63 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. கடதாசிகளை வீணாக்காமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆவணங்களை பரிமாறுகின்றமையினால் காகிதாதிகள் விரயம் அதிகமாக குறைவடைந்துள்ளது.
 
sewanagala ga office.2மின்சாரம் மற்றும் தண்ணீர் பாவனை மிகவும் சிக்கனமாக இருந்தமையினால் அவற்றுக்கான கட்டணங்களும் மிகவும் குறைவானதாகவே உள்ளது. இதனால் 2015 -2016 டிசம்பர் மக்கள் மற்றும் செவனகல அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களினால் அரசாங்கத்திற்கு 7041487 ரூபாவை அரசுக்கு மீதப்படுத்தி வழங்கியுள்ளது செவனகல பிரதேச செயலகம்.
 
கொழும்பு, கண்டி  போன்ற அதி நவீன நகரமயமாக்கப்பட்ட பிரதேசங்களில் நவீன தொழில்நுட்பம் சரியான முறையில் பயன்படுத்தப்படாமல் வீண் விரயமாக்கப்படும் வேலையில்,  செவனகல போன்ற பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் கிராம மக்கள் அதன் உச்சப்பலனை அனுபவித்து வருகின்றனர்.
 
மில்லியன் கணக்கான செலவு குறைக்கப்பட்டு தேசிய நிதியை பாதுகாத்தமை மட்டுமன்று மக்கள் மனம மகிழும் வகையிலான சேவையையும் பெற்றுகொடுக்கும் செவனகல பிரதேச செயலகம் இன்றைய சூழ்நிலையில் சாதனை படைத்துள்ளது என்றே கூறவேண்டும்.
 
இதனை சிறந்த உதாரணமாக கொண்டு அனைத்து அரச நிறுவனங்களும் நவீன தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்பதே அனைவரிதும் எதிர்பார்ப்பாகும்.
 
குமாரி கல்பாவில
 
தமிழில்- ஆர்த்தி பாக்கியநாதன்
 
 
 
 
 
 
 
 
 
 

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் இனங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் முன்னெடுப்புக்களால் விரிசல்களும் முரண்பாடுகளும் அதிகமாகின.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள்- 2019-09-10

11 September 2019
அமைச்சரவை தீர்மானங்கள்- 2019-09-10

அமைச்சரவை தீர்மானங்கள்- 2019-09-10

ஊடக அறிக்கை - உள்ளுர் அதிகார சபை தேர்தல்கள் -2019

05 September 2019

உள்ளுர் அதிகார சபை தேர்தல்கள் -2019

அமைச்சரவை முடிவுகள் 2019.09.03

04 September 2019
அமைச்சரவை முடிவுகள் 2019.09.03

2019.09.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகள்

ஊடக அறிக்கை - 2019.08.29 -"நாட்டுக்காக ஒன்றிணைவோம்" -யாழ்ப்பாண மாவட்டம்

30 August 2019

யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய...

அமைச்சரவை முடிவுகள் 2019.08.27

28 August 2019
அமைச்சரவை முடிவுகள் 2019.08.27

2019.08.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகள்

அமைச்சரவை முடிவுகள் 2019.08.27

28 August 2019
அமைச்சரவை முடிவுகள் 2019.08.27

2019.08.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகள்

ஊடக அறிக்கை - 2019.08.27 -நாட்டுக்காக ஒன்றிணைவோம் -யாழ்ப்பாண மாவட்டம்

28 August 2019

யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய...

ஊடக அறிக்கை - 2019.08.27 -நாட்டுக்காக ஒன்றிணைவோம் -யாழ்ப்பாண மாவட்டம்

28 August 2019

யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய...

ஊடக அறிக்கை - 2019.08.26 -நாட்டுக்காக ஒன்றிணைவோம் -யாழ்ப்பாண மாவட்டம்

27 August 2019

யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய...

அமைச்சரவை முடிவுகள் 2019.08.20

27 August 2019
அமைச்சரவை முடிவுகள் 2019.08.20

அமைச்சரவை முடிவுகள் 2019.08.20

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo