• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

இன்று பொசன் பௌர்ணமி தினம்!

இன்று உலக வாழ் பௌத்தர்கள் அனைவரும் பொசன் தினத்தை கொண்டாடுகின்றனர். வெசக் தினத்தையடுத்து வருவதே பொசன் தினமாகும். இலங்கைக்கு சங்கமித்தை வௌ்ளரச மரக்கிளையுடன் வருகைத் தந்த தினமே பொசன் தினமாக கொண்டாடப்படுகிறது.
 
அதிக பௌத்தர்கள் செறிந்து வாழும் இலங்கையில் மிகவும் பக்திப் பூர்வமாக கொண்டாடப்படும் ஆன்மீகத் தினங்களில் பொசனும் முக்கிய இடத்தை வகிக்கிறது. 
 
பொசன் பெளர்ணமி பெளத்த மதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள தினம்.   நேபாளத்தின் லும்பினி என்னும் இடத்தில் அரச குடும்பத்தில் இளவரசனாக பிறந்த சித்தார்த்தர் அவருடைய  ஜாதகத்தில் குறிப்பிட்டிருந்தமைக்கமைவாக  இருபத்தொன்பதாவது வயதில் துறவறம் பூண்டார். புத்தகயாவில் தியானத்தில் ஈடுபட்ட அவர் 

bhn

ஞானம் பெற்று புத்தரானார். அரச மரத்தின் கீழ் தவத்தில் இருந்தபோது ஞானம் பெற்றமையினால் அவருக்கு போதி மரத்து மாதவன் என்றொரு பெயரும் உள்ளது. அத்துடன் அரச மரத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் இடையில் நெருக்கமான உறவும் ஆரம்பமானது.
 
ஞானம் பெற்ற சித்தார்த்தர் பௌத்த மதம் குறித்து பல இடங்களை போதிக்க ஆரம்பித்தார். அவ்வாறு அவர் போதித்த போது வாசனாரி என்னுமிடத்தில் ஐந்து சீடர்களை தெரிவு செய்து பௌத்த மத கோட்பாடுகளை விளக்கி பௌத்த சமயத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கான வித்தையிட்டார்.
 
தொடர்ந்து புத்தப்பெருமானின் போதனைகளை கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பௌத்த மதத்தை தழுவினர். கருJaya Sri maha Bodhiணை நிறைந்த, ஆசை துறந்த வாழ்வே அமைதிக்கு வாழ்வுக்கு நிம்மதியை தரும் என்ற புத்த பெருமானின் போதனையை கேட்ட போர் வேட்கை கொண்ட அசோக சக்கரவர்த்தியே பௌத்தராக மாறினார் என்கிறது வரலாறு. அசோக சக்கரவர்த்தியின் பௌத்த பற்று இலங்கைக்கு பௌத்த சமயம் பாதம் பதிக்க காரணமாகியது.
 
அசோக சக்கரவர்த்தியின் குடும்பம் முழுவதும் பௌத்த சமயத்தை தழுவிக்கொள்ள துறவறம் பூண்ட அவருடைய மகள் சங்கமித்தை தனது சகோதரன் துணையுடன் இலங்கைக்கு வௌ்ளரச மரக்கிளையுடன் பாதம் பதித்தார். அதுவே இலங்கையில் பௌத்த சமயத்தின் ஆரம்பம். இலங்கையை போன்றே ஆசிய கண்டத்தின்  மியான்மார் (பர்மா), சிங்கப்பூர், மலேசியா, திபெத், சீனா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பௌத்த மதம் மிக வேகமாக பரவியது.
 
பௌத்த சமயத்தின் அடையாளமாக இன்று பாரிய விருட்சமாக வளர்ந்துள்ள சங்கமித்தை கொண்டு வந்த வௌ்ளரசு மரக்கிளை அநுராதபுரத்தின் மகாமேகவண்ண பூங்காவில் நடப்பட்டுள்ளது.  ஶ்ரீ மாபோதி என்றழைக்கப்படும் இவ்வௌ்ளரசு விருட்சத்தில் பொசன் தினத்தில் விசேட சமய நிகழ்வுகள் நடைபெறும். 
 
இது கிமு 288 ஆம் ஆண்டில் நடப்பட்டதாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. மனிதனால் நடப்பட்டதும், அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான, மரங்களில், உலகிலேயே மிகப் பழமையான மரம் இதுவே எனச் சொல்லப்படுகிறது. பிக்குனியான சங்கமித்தை கொண்டு வந்த அம்மரக்கிளையை தேவ நம்பிய தீசன் நட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.
 
ஆர்த்தி பாக்கியநாதன்
 
 
 
 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் 2019.07.07

09 July 2019
அமைச்சரவை தீர்மானங்கள் 2019.07.07

அமைச்சரவை தீர்மானங்கள் 2019.07.07

அமைச்சரவை முடிவுகள்- 2019.05.21

21 May 2019
அமைச்சரவை முடிவுகள்- 2019.05.21

அமைச்சரவை முடிவுகள் -2019.05.21    

2019.04.09

10 April 2019
2019.04.09

2019.04.09

2019.04.02

04 April 2019
2019.04.02

2019.04.02

2019.03.26

27 March 2019
2019.03.26

2019.03.26

2019.03.19

20 March 2019
2019.03.19

2019.03.19 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் 

2019.01.02

03 January 2019
2019.01.02

2019.01.02

2018.12.27

27 December 2018
2018.12.27

 

2018.12.21

22 December 2018
2018.12.21

 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo