• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

1,900 ஆண்டுக்கு பழமையான மம்மியை சின்க்ரோட்ரோன் எக்ஸ்ரே மூலம் ஆராய்வு

சுமார் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டு இது வரை திறக்கப்படாதிருந்த மம்மியொன்றை நவீன எக்ஸ்ரே மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்துள்ளனர்.
 
நவீன உயர் தன்மை கொண்ட  சின்க்ரோட்ரோன் எக்ஸ்ரேவை பயன்படுத்தி மம்மியை ஸ்கேன் செய்வது இதுவே முதல் முறையாகும். 
 
ஒரு உடலைப் பற்றிய அதிக விவரங்கள் கொண்ட முப்பரிமாண பகுப்பாய்வை தயாரிப்பதும், மம்மியின் மேலே சுற்றப்பட்டிருக்கும் துணிக்கு கீழே ஒளிந்திருக்கும் அனைத்துப் பொருட்களையும் கண்டறியும் நோக்கில் இவ்வாறு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
 
 சிகாகோவில் உள்ள நார்ச்வெஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்த மம்மியில், 1,900 ஆண்டுக்கு முன்பு இறந்த ஐந்து வயது சிறுமியின் உடல் இருப்பதாக நம்பப்படுகிறது. இம்மம்மியில் குழந்தையின் படமொன்றும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
 
 
சிறுமியின் உடல் மட்டும் பதப்படுத்தப்படவில்லை. அவளின் முகம் வரையப்பட்டு, அவள் மீது இறுக்கமாகச் சுற்றப்பட்டிருக்கும் துணியின் மேலே வைக்கப்பட்டுள்ளது. படங்களைக் கொண்ட 100 மம்மிகளில் இதுவும் ஒன்று.
அச்சிறுமி அப்போது எப்படி இருந்தாள் என்பதை, வழக்கத்துக்கு மாறான இந்த புகைப்படம் காட்டுகிறது. அத்துடன் இந்த ஸ்கேனிங் திட்டத்தின் மூலம், சிறுமியின் உடல் மீது சுற்றப்பட்டிருக்கும் துணியைத் தொந்தரவு செய்யாமல், அச்சிறுமியின் வாழ்க்கை பற்றியும் இறப்பு பற்றியும் அதிகளவு வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர் விஞ்ஞானிகள். இக்குழந்தை மலேரியா அல்லது தட்டம்மை போன்ற நோய்கள் இறந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 
பிரிட்டனைச் சேர்ந்த தொல்பொருள் அறிஞர், சர் வில்லியம் ஃபிளெண்டர்ஸ் பெட்ரியால் 1911-ம் ஆண்டு இந்த மம்மி எகிப்தில் தோண்டி எடுக்கப்பட்ட மறுவருடம்  சிகாகோவில் உள்ள ஒரு கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. அன்று தொடக்கம் கண்காட்சிகளில் வைக்கப்பட்டிருந்த அம்மம்மியில் தற்போது என்னவுள்ளது என்று கண்டறியும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
Mummy 2
 
Mummy 3
Mummy 4
 
பிபிஸி
 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் 2019.07.07

09 July 2019
அமைச்சரவை தீர்மானங்கள் 2019.07.07

அமைச்சரவை தீர்மானங்கள் 2019.07.07

அமைச்சரவை முடிவுகள்- 2019.05.21

21 May 2019
அமைச்சரவை முடிவுகள்- 2019.05.21

அமைச்சரவை முடிவுகள் -2019.05.21    

2019.04.09

10 April 2019
2019.04.09

2019.04.09

2019.04.02

04 April 2019
2019.04.02

2019.04.02

2019.03.26

27 March 2019
2019.03.26

2019.03.26

2019.03.19

20 March 2019
2019.03.19

2019.03.19 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் 

2019.01.02

03 January 2019
2019.01.02

2019.01.02

2018.12.27

27 December 2018
2018.12.27

 

2018.12.21

22 December 2018
2018.12.21

 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo