• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

மின்சாரத்தை சேமிக்க உதவுமாறு பொது மக்களிடம் கோரிக்கை

தற்போது நிலவும் வரட்சியான காலநிலையினால் மின்சாரத்தை பாதுகாப்பதற்கு வீதி விளக்குகளை எரிய விடும் மணித்தியாலத்தை குறைக்குமாறு  மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கோரியுள்ளார்.
 
கேகாலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் நேற்று (20) கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
 
இக்காலநிலை  தொடர்ந்தால் நீர்மின் உற்பத்தியில் பாரிய சவாலை எதிர்நோக்க வேண்டியேற்படும். நீர்மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியாது போனாலும் பொது மக்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். அதற்கு அதிக செலவிட  வேண்டும். இச்செலவை திரைசேரியே செலவிடும். மின்சாரசபை அல்ல. அதாவது அச்செலவை நாம் அனைவரையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதனால் இந்நிலைமையில் இருந்து மீள்வதற்கு மின்சாரத்தை சேமிக்குமாறு  கேட்டுக்கொள்கிறோம். குறைந்தது 50 மெகாவோல்ட் மின்சாரத்தை சேமிக்க முடியுமாயிருந்தால் அது பாரிய வெற்றியாகும்.
 
இலங்கையில் சுமார் 10 இலட்சம் வீதி விளக்குகள் காணப்படுகின்றன. இவற்ளை ஒளிரவிடுவதை காலையும் மாலையும் அரை மணித்தியாலம் குறைக்க முடியுமாக இருந்தால் தற்போதைய நிலைக்கு அது பாரிய உதவியாக இருக்கும். முதலில் குடிநீரை வழங்குவது குறித்தே நாம் சிந்திக்க வேண்டும். அதன் பின்னர் தான் மின்சாரத்தைப் பற்றி நினைக்கலாம். குடிநீரைப் பற்றி சிந்திக்காமல் மின்சாரம் தயாரிப்பதை மட்டுமே நாம் யோசித்தோமானால் எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி வரைக்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். எனினும் மின்சாரத்தை விடவும் குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில் இக்காலநிலை நீடித்தால், மழை பெய்யாவிடின் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21, 22ம் திகதியளவில் நீரில் மின்சாரம் தயாரிப்பதை நிறுத்த வேண்டியேற்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.