• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நடத்தும் “Speculo 2017 கண்காட்சி

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் முதல்முறையாக ஏற்பாடு செய்துள்ள “Speculo 2017 ” தேசிய ஓவிய மற்றும் நுண்கலை கண்காட்சி இம்மாதம் 24,24ம் திகதிகளில் கொழும்பு நுண்கலை பல்கலைகழகத்தின் ஜே.டீ. ஏ. பெரேரா கலைகூடத்தில் நடபெறவுள்ளது.
 
நாடு பூராவும் இருந்து ஆயிரக்கணக்கான ஓவியங்கள் இக்கண்காட்சிக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன் அவற்றில் தெரிவு செய்யப்பட்ட 300 ஓவியங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இலங்கையின் பிரபல ஓவியக் கலைஞர்கள் பலரின் ஓவியங்களை ஒரே இடத்தில் கண்டுகளிப்பதற்கான வாய்ப்பு இக்கண்காட்சியில் கிடைக்கவுள்ளது. இக்கண்காட்சி நடைபெறும் அதேவேளை, நேரடி ஓவியப் போட்டிகள், Portrait scathing,  Mehendi Arts என்பனவும் இடம்பெறவுள்ளன.
 
அன்றைய தினம் நடத்தப்படும் போட்டிகளில் சிறந்த ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. 'எங்களை காணும் நீங்கள்' என்ற  தொனிப்பொருளில் நாடு முழுவதும் உள்ள வளர்ந்தோர். இளைஞர் யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என அனைவரிடமிருந்தும் ஓவியங்களை பெற்று ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சியை கண்டுகளிக்க அனைவரையும் வருமாறு  ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
 
பாடசாலை மட்டம், திறந்த போட்டி மற்றும் சிரேஷ்ட பிரிவு என்று மூன்று பிரிவுகளில் இப்போட்டி நடத்தப்பட்டது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.